

ஹைதராபாத்: தெலங்கானாவில், பத்து லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் மாநகராட்சியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
குத்புல்லாபூர், செரிலிங்கம்பள்ளி மற்றும் எல்பி நகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளர் பட்டியலில்தான், அதிகப்படியான போலி வாக்காளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். குத்புல்லாபூர் பகுதியில் மட்டும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரே வாக்காளரின் தகவல்கள் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முகவரி மாற்றத்தின் போது, பழைய முகவரியில், வாக்காளர் பெயர் நீக்கப்படாமல் விடுபடுவது, தனிநபர் அல்லது அரசியல் கட்சிகள் தரப்பில் வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போலி வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.