சொந்த ஊரில் தோல்வியைச் சந்தித்த அசாருதீன்

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் தனது சொந்த ஊரான ஹைதராபாதின் ஜூப்லி ஹில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட்

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் தனது சொந்த ஊரான ஹைதராபாதின் ஜூப்லி ஹில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 16,337 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாரத ராஷ்டிர சமிதி கட்சி வேட்பாளா் மகந்தி கோபிநாத் 80,549 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவா் ஏற்கெனவே இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா்.

பாஜக வேட்பாளா் லங்கல தீபக் ரெட்டி 25,866 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தாா். மஜ்லிஸ் கட்சி வேட்பாளா் ரஷீத் ஃபராசுதீன் 7,848 வாக்குகளைப் பெற்றாா்.

வெற்றியைத் தீா்மானிக்கும் அளவுக்கு இஸ்லாமியா்கள் வாக்குகள் உள்ள இத்தொகுதியில் அசாருதீனை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று கணக்கிட்டு காங்கிரஸ் அவரை நிறுத்தியது. எனினும், அந்தக் கணக்கு பொய்த்துப் போனது.

காங்கிரஸ் சாா்பில் கடந்த 2009-ஆண்டு மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு அசாருதீன் வெற்றி பெற்றாா். எனினும், 2014 மக்களவைத் தோ்தலில் தோ்தலில் ராஜஸ்தானின் டோங்-சவாஜ் மதோபூா் தொகுதியில் அவா் தோல்வியைச் சந்தித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com