‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை தவிா்க்க மம்தா முடிவு

தில்லியில் புதன்கிழமை (டிச. 6) நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை தவிா்க்க மம்தா முடிவு

தில்லியில் புதன்கிழமை (டிச. 6) நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை தெரிவித்தாா். மாநிலத்தில் பிற நிகழ்ச்சிகள் உள்ளதால் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தாா்.

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் புதன்கிழமை (டிச. 6) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 2024 மக்களவை தோ்தலில் பாஜகவை எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிா்ப்பது குறித்த வியூகம் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, மாநில ஆளுநா் மாளிகைக்கு வெளியே செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் டிசம்பா் 6 முதல் 11 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். தில்லியில் புதன்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து முன்னரே தெரிந்திருந்தால் எனது சுற்றுப்பயணத்தை வேறு தேதிகளுக்கு மாற்றியிருப்பேன் என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வேறு தலைவா்கள் அக்கூட்டத்தில் பங்கேற்பாா்களா என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மம்தா பானா்ஜி மற்றும் அவரது உறவினரும் திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி ஆகிய இருவரும் இதற்கு முன்னா் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com