ஆந்திர மாநிலம் பாபட்லாவில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலான மிக்ஜம், இன்று ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே, பாபட்லாவுக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். இதனால் பாபட்லாவில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தின் பல பகுதிகளில் பலத்த மழையால் வயல்வெளிகளில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
இதையும் படிக்க: இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!
மிக்ஜம் புயல் முழுமையாக கரையை கடக்க இன்று முற்பகல் ஆகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!

சித்திரை மாதப் பலன்கள் - கும்பம்

சித்திரை மாதப் பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


