'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ரௌத்

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாக சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ரௌத்

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாகவும், இதன் அடுத்த கூட்டம் டிசம்பர் 16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, “இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று (டிச. 6) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருக்கிறது. 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மாநிலத்தில் வெள்ள மீட்பு பணிகளில் இருக்கிறார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு உடல்நிலை சரியில்லை, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.

எனவே இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறும். எங்களது கூட்டணிக்கான முகம் மற்றும் பல முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும். இந்தியா கூட்டணியினர் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் காண்பீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (புதன்கிழமை) இந்தியா கூட்டணியின் கூட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com