கோப்புப்படம்.
கோப்புப்படம்.

16,000-க்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்களில் போலி முகவரி!

உத்தர பிரதேசத்தில் 16,000-த்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்களில் தவறான முகவரிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
Published on

உத்தர பிரதேச மாநிலத்தில் 16,000த்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் முகவரிகளைச் சோதனையிடும் பணி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது. இதில் நான்கில் ஒரு துப்பாக்கி உரிமம் தவறான முகவரியைக் கொண்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கோரக்பூரில் உள்ள 21,624 துப்பாக்கி உரிமையாளர்களில் 16,162 பேர் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இல்லாததும், அதில் 7,955 துப்பாக்கி உரிமையாளர்களைத் தொடர்புகொள்ள முடியாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும், துப்பாக்கி உரிமையாளர்கள் தங்களது புதிய முகவரியை உரிமத்தில் புதுப்பிக்க தவறியிருக்க வேண்டும் அல்லது போலியான முகவரியின் மூலம் துப்பாக்கி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. 

வரும் மக்களவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களையும் கண்டுபிடித்து அவர்களது புதிய முகவரிகளை உரிமத்தில் இணைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

குற்றங்களில் ஈடுபடுபவர்களின் துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்படும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அகில் குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com