போரில் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும்!: பிரியங்கா காந்தி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்றும், உடனடியாக போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா தன் பங்கை அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர், இந்தியா ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீன மக்களுக்கு தன் ஆதரவை அளித்து வந்தது. ஆனால் இப்போது அனைத்து மக்களும் படுகொலை செய்யப்படும்போது அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பின் தனது தாக்குதல்களை மிகவும் வலுப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் 16,000க்கும் மேற்பட்ட உயிர்களை இதுவரைக் கொன்றுள்ளது, உணவுப்பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். மனிதம் எங்கே போனது? எனவும் பதிவிட்டிருக்கிறார். 

இதுவரை 16,200 பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளதாகவும், 42,000 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com