கேரளம்: இந்திய கம்யூ. கட்சியின் மாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன் காலமானார்
கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன் காலமானார்.


கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன் காலமானார்.
கானம் ராஜேந்திரன்(73), மூன்று மாதங்களாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக கட்சியில் இருந்து அவர் விடுப்பும் எடுத்திருந்தார்.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கானம் ராஜேந்திரன் காலமானதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மறைந்த கானம் ராஜேந்திரன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
1950 ஆம் ஆண்டு கோட்டயத்தில் பிறந்த அவர், இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 23 வயதில் சிபிஐ-யின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் முன்னணியின் மாநிலச் செயலாளராக ஆனார்.
தொடர்ந்து, கானம் ராஜேந்திரன் தனது 28-வது வயதில் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...