
கர்நாடகத்தில் அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள்.
கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் இருந்து சிக்கபல்லாபுரா நோக்கி சனிக்கிழமை இரவு மாணவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்கபல்லாபுரா புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஒருவர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான காரை மாணவர்களில் ஒருவரே ஓட்டி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.