புணேவில் சொத்து பதிவு விகிதம் 7 சதவிகிதம் அதிகரிப்பு: நைட் ஃபிராங்க்

புணேவில் சொத்துகளின் பதிவு நவம்பரில் 7 சதவிகிதம் அதிகரித்து 14 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது என நைட் பிராங்க் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: புணேவில் சொத்துகளின் பதிவு நவம்பரில் 7 சதவிகிதம் அதிகரித்து 14 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது என நைட் பிராங்க் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா, அரசின் தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட புணே மாநகரத்தின் சொத்துக்களின் பதிவு எண்களை இன்று வெளியிட்டது. இதில் 2022 நவம்பரில் 13,694 பதிவுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் மொத்தம் 14,607 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 2023ல் முத்திரைத் தாள் வரி வசூல் ரூ.473 கோடியாக இருந்தது. அதே வேளையில் 2023 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.13,342 கோடியாக இருந்தது

2023 ஜனவரி முதல் நவம்பர் வரை, புணே நகர மக்கள் மொத்தம் 1,37,217 ஆவணங்களை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,25,702 பதிவுகளிலிருந்து இது 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் முத்திரைத் தாள் வரி வசூல் ரூ.4,344 கோடியிலிருந்து 10 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,779 கோடியானது. இந்தநிலையில் புணேவில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு இந்த ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் 38 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,06,562 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com