ஜம்மு-காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: குலாம் நபி ஆசாத்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: குலாம் நபி ஆசாத்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய தீர்ப்பை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர்  பேசியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றமே எங்களது கடைசி நம்பிக்கையாக இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அவர்கள் ஜம்முவில் இருந்தாலும், காஷ்மீரில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது அவசரகதியாக தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com