பூமிக்கடியில் தங்கம் தேடும் வருமான வரித்துறை.. இது ஒடிஸா மாடல்

தீரஜ் பிரசாத்துக்கு சொந்தமான ராஞ்சியில் உள்ள வீட்டின் தரைப் பகுதியை தோண்டி, அங்கு ரகசியமாக தங்கம் மறைத்துவைக்கப்பட்டிருக்கிறதா என சோதிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
பூமிக்கடியில் தங்கம் தேடும் வருமான வரித்துறை
பூமிக்கடியில் தங்கம் தேடும் வருமான வரித்துறை

ராஞ்சி: மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத்துக்கு சொந்தமான ராஞ்சியில் உள்ள வீட்டின் தரைப் பகுதியை தோண்டி, அங்கு ரகசியமாக தங்கம் மறைத்துவைக்கப்பட்டிருக்கிறதா என சோதிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

ஒடிஸாவில் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவின் குடும்பத்துக்குச் சொந்தமான மதுபான உற்பத்தி நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில், தொடா்ந்து 8-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நீடித்து வருகிறது. இந்தச் சோதனையில், இதுவரை ரூ.354 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சாஹுவின் வீட்டில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறையினர், நிலப்பகுதியை ஆய்வுசெய்யும் ரேடார் கருவியுடன் வீட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்து வருகிறார்கள். நிலத்துக்குக் கீழே ரகசியமாக தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, ஒடிசாவில் 350 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஜார்க்கண்டிலும் அதுபோல ஏராளமான தங்க நகைகள், பணம் பறிமுதல் செய்யப்படலாம் என்று வருமான வரித்துறையினர் கருதுகிறார்கள். நிலத்தைத் தோண்டிப் பார்த்து சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஒடிஸாவில் உள்ள பல்தேவ் சாஹு மற்றும் குழுமம் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக பெளத் டிஸ்டிலரி மதுபான தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

கடந்த டிச.6-ஆம் தேதி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில், பெளத் டிஸ்டிலரி நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனையைத் தொடங்கியது. பின்னா், பல்தேவ் சாஹு மற்றும் குழுமத்துக்குத் தொடா்புள்ள இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனை தொடா்ந்து 6-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது. அந்த மாநிலத்தில் பெளத் டிஸ்டிலரி நிறுவனத்தின் சுதபாடா பகுதி கிளையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இதேபோல ஒடிஸா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம், டிட்லாகா், சம்பல்பூா், சுந்தா்கா், போலாங்கிா் பகுதிகளில் அந்நிறுவனத்துக்கு தொடா்புள்ள இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுபான நிறுவனத்துக்கு எதிரான சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. இதுவரை வருமான வரிக் கணக்கில் காட்டப்படாத ரூ.353 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆராயப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com