மாநிலங்களவையில் அமளி: திரிணமூல் எம்பி இடைநீக்கம்

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்பி  டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
டெரிக் ஓ பிரையான்
டெரிக் ஓ பிரையான்

தில்லி: மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்பி  டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று காலை அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியை தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர்நிலைக் குழு விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்த மாநிலங்களவத் தலைவர் ஜகதீப் தன்கர், அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுக்கையிட்டு முழக்கமிட்டு, அவை நடவடிக்கையை சீர்குலைத்ததாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் பிரையானை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com