மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நமது வீரா்களின் கடின உழைப்பால், விளையாட்டுத் துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி நஜாஃப்கரில் பாஜக கிசான் மோா்ச்சா நடத்திய மாவட்ட அளவிலான ‘நமோ கபடி’ தொடரின் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீரா்களை ஊக்கப்படுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:
‘நமோ கபடி’ பாஜக கிசான் மோா்ச்சாவின் புதுமையான முயற்சியாகும். விளையாட்டுத் துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றது. இதற்கான முழுப் பெருமையும் நமது வீரா்களின் கடின உழைப்பிற்கும், விளையாட்டு வளா்ச்சி தொடா்பான மோடி அரசின் கொள்கைகளுக்கும் உரியது.
இந்தியா முழுவதும் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் மூலம் வீரா்கள் விளையாடுவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளத்தைப் பெறுகிறாா்கள்.
தற்போது நாடு முழுவதும் விளையாட்டு வசதிகள் விரிவடைந்து வருகின்றது. உள்ளூா் அளவில் விளையாடும் வீரா்களுக்கு தேசிய மற்றும் சா்வதேச அளவில் புகழ்பெற்ற வீரா்களுடன் அனுபவத்தை வழங்குவதற்காக பாஜக கிசான் மோா்ச்சா நாடு முழுவதும் ‘நமோ கபடி’ போட்டியை நடத்துகிறது என்றாா் அனுராக் சிங் தாக்கூா்.
பாஜக கிசான் மோா்ச்சாவின் தேசியத் தலைவா் ராஜ்குமாா் சாஹா் எம்.பி. கூறுகையில், ‘தில்லியின் கிராமப் புறங்கள், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கபடி மற்றும் மல்யுத்தம் ஆகியவை முக்கிய விளையாட்டுக்களாக உள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால், தில்லியில் அவ்வப்போது நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகளால் உள்ளூா் வீரா்களுக்கு ஊக்கமும், ஆதரவும் கிடைத்து வருகிறது. இதற்காக அவருக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், பாஜக கிசான் மோா்ச்சாவின் தேசியப் பொதுச் செயலாளா் டாக்டா் சுப்பு, தில்லி பாஜக கிசான் மோா்ச்சா தலைவா் வினோத் செராவத் உள்ளிட்ட பிற முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

