நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தின் பிளான் பி?

நீலமும் அமோலும் பிளான் ஏ-வைச் செயல்படுத்த முடியாவிட்டால், அந்தக் குழுவிடம் தற்காலிக திட்டம் (பிளான் பி) இருந்ததாக லலித் ஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தின் பிளான் பி?

நீலமும் அமோலும் பிளான் ஏ-வைச் செயல்படுத்த முடியாவிட்டால், அந்தக் குழுவிடம் தற்காலிக திட்டம் (பிளான் பி) இருந்ததாக லலித் ஜா தெரிவித்துள்ளார்.

மக்களைவையில் அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் திட்டம் நிறைவேறாமல், நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியாமல் போனால், பிளான் பி வைத்திருந்ததாக மக்களவை அத்துமீறல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, விசாரணையின்போது காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

லலித் ஜா கூறுகையில்,  நீலமும் அமோலும் ப்ளான் ஏ-யின்படி நாடளுமன்றத்துக்கு வரமுடியாமல் போனால், மகேஷும் கைலாஷும் வேறு பக்கத்தில் இருந்து நாடளுமன்றத்தை அடைவார்கள்.

பின்னர் அவர்கள் வண்ண புகைக் குப்பிகளை வீசி ஊடகங்கள் முன் முழக்கங்களை எழுப்பும் திட்டம் இருந்ததாக லலித் ஜா கூறினார்.

குருகிராமில் உள்ள விஷால் சர்மா என்ற விக்கியின் வீட்டிற்கு மகேஷ் மற்றும் கைலாஷும்  செல்ல முடியாமல் போனதால், நாடாளுமன்றத்துக்கு வெளியே அமோலும், நீலமும் வண்ண புகைக் குப்பிகளை வீசி கட்டாயம் பிளான் ஏ-வை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவானது.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குருகிராமில் விஷால் சா்மா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கியிருந்துள்ளனா். அங்கிருந்து புதன்கிழமை காலை நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனா். இருவருக்கு மட்டுமே நாடாளுமன்ற நுழைவு அனுமதிச் சீட்டு கிடைத்துள்ளது.

2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற அதே நாளில் மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து வண்ண புகைக் குப்பிகளை வீசி வெற்றிகறமாக இத்திட்டத்தை நிறைவேற்றினர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு லலித் தலைமறைவாக இருக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, லலித் ஜா ராஜஸ்தானில் தலைமறைவாக இருக்க உதவும் பொறுப்பு மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகேஷ் தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி லலித்துக்கு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லலித் மற்றும் மகேஷ் வியாழக்கிழமை இரவு கர்தவ்யா பாத் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com