மனைவிக்கு தீ வைத்த கணவர்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

மனைவியைத் தீ வைத்து கொளுத்திய நபருக்கு  நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
கோப்பு
கோப்பு
Published on
Updated on
1 min read

லத்தூர்: மனைவியை மகன் முன்னால் தீயிட்டுக் கொளுத்திய 40 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லத்தூர் நீதிமன்றம்.

மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.பி ரோட், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 302 மற்றும் 498-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்- கஜனன் ஏக்நாத் சாக்ரே, குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், ரூ.500 அபராதத் தொகையும் விதித்துள்ளார்.

எதிர்த்தரப்பு வாதத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது தம்பி இருவரும் கஜனனின் மனைவி ஜெயா பாயிடம் அவரது பெற்றோரிடம் பணம் பெற்று வரச் சொல்லி மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மகனின் கண் முன்னால், ஜன.13, 2021-அன்று பெட்ரோல் ஊத்தி ஜெயா பாய் மீது தீ வைத்துள்ளார்.

40 சதவிகித தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயா பாய், ஒரு மாதத்திற்குப் பின் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 9  சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் மகன் வழங்கி சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com