மும்பையின் தாதாவான தாவூத் இப்ராஹிம் கடந்த பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார்.
மும்பையில் 1993 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 250 -க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உலகளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம்.
தொடர்ந்து, இந்திய அரசின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளியான பின், தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் துபை மற்றும் பாகிஸ்தானில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், இவரது மருமகன், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், மர்ம நபர் ஒருவரால் தாவூத் இப்ராஹிமுக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட அவர் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவல் குறித்த எந்த வித ஆதாரமான செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.