
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் இன்று (திங்கள்கிழமை) மாலை 3.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியின் செயல் நாடாளுமன்றத்திற்கே அவமானம்: கபில் சிபல்
இதனால் லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
மேலும் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் இன்று (டிச.18) மாலை 4.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பிரதமரை சந்திக்கவுள்ள சித்தராமையா; காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.