இந்த அடுக்குமாடி குடியிருப்பு வாழத் தகுதியற்றது: மாநகராட்சி நோட்டீஸ்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என நிர்வாகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: தில்லி மாநகராட்சி நிர்வாகம், சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறச் சொல்லி நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

வடமேற்கு தில்லி, முகர்ஜி நகரில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு 2007-09 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இங்கு மத்திய மற்றும் உயர்தர வர்க்கத்தைச் சார்ந்த குடியிருப்புகள் 336 உள்ளன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டுமானத்தில் சிக்கல் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு மனிதர்கள் வாழ்வது ஆபத்தானது மற்றும் இந்த இடம் வாழத் தகுதியற்றது என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்போர் நலச் சங்கம், இந்தக் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். புதிய கட்டுமானம் கட்டப்படும் வரையிலான வாடகை இழப்பீடு எங்களுக்குத் தரப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்தக் குடியிருப்புகளை மாநகராட்சி தகர்க்க முடிவு செய்துள்ளது. ஐஐடி தில்லி வல்லுனர் குழுவின் ஆலோசனையின்படி சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரி கட்டுமான சேர்க்கையில், குளோரைடு அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கான்கிரீட் கட்டுமானம் வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மேம்பாட்டு வாரியம் 336 குடியிருப்புகளும் உடனடியாக காலி செய்யப்பட்டால், இழப்பீடு தருவதாக முன்னர் தெரிவித்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com