புதிய கரோனா வகை திரிபைப் பற்றி அறிய வேண்டிய 5 தகவல்கள்

உலகம் முழுவதும் விடுக்கப்பட்டிருந்த சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்று சரியாக 7 மாதங்களில், உலக நாடுகள் சிலவற்றில் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய திரிபு பரவி வருகிறது.
புதிய கரோனா வகை திரிபைப் பற்றி அறிய வேண்டிய 5 தகவல்கள்
Published on
Updated on
1 min read


புது தில்லி: உலகம் முழுவதும் விடுக்கப்பட்டிருந்த சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்று சரியாக 7 மாதங்களில், உலக நாடுகள் சிலவற்றில் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய திரிபு பரவி வருகிறது.

ஒமைக்ரான் வகை கரோனாவின் பல புதிய மரபணு மாற்றப்பட்ட திரிபுகள் ஏராளமானவை உலகம் முழுவதும் பரவி பல்வேறு காலக்கட்டங்களில் ஒரு சில தாக்கங்களை ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில், மீண்டும் மக்களை கவலைகொள்ளச்செய்யும் வகையில், ஜேஎன் 1 வகை திரிபு கரோனா பரவலை அதிகரிக்கச் செய்திருக்கிறது.  இதன் மூலம் புதிய கரோனா அலை உருவாகுமா என்பது குறித்து உறுதி செய்ய இன்னும் ஒரு சில நாள்கள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கரோனா அறிகுறி இருப்பவர்கள் அனைவரையும் சோதிப்பது என்பது சாத்தியமில்லாதது, ஆனால் மருத்துவமனையில் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் அனைவரையும் சோதிப்பது சிறந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முகக்கவசம் பலனளிக்குமா?
வெளியில் செல்லும்போதும், கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போதும் முகக்கவசம் அணிவது பலனளிக்கும். 

இதுவரை அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், முதயிவர்கள், கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிவது நல்லது. அது மட்டுமல்ல, சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்களும் முகக்கவசம் அணிவது நோய் பரவாமல் தடுக்க உதவும்.
 

கூடுதல் தவணை ஊசிகள் போடலாமா?
கரோனா பரவலுக்கு எதிராக கரோனா தடுப்பூசிகள் நல்ல முறையில் செயல்பட்டன. ஏற்கனவே தொற்று வந்தவர்களுக்கும், இரண்டு தவணை ஊசி போட்டவர்களுக்கும் கூட மீண்டும் பரவுகிறது.

ஜேஎன்1 வகை கரோனாவை உலக சுகாதார அமைப்பு வேரியன்ட் ஆஃப் இன்ட்டிரஸ் என்று வகைப்படுத்தியிருக்கிறது. அதற்குக் காரணம் அதன் பரவும்தன்மைதான். ஏற்கனவே இந்த வகை திரிபு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கிவிட்டது.

எனவே, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், வெளியில் சென்று வேலை செய்பவர்கள் கூடுதுல் தவணை போட்டுக் கொள்ளலாம் என்றே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பருவக்கால நோய்களுக்கான அறிகுறிகளே, இந்த புதிய வகை திரிபுக்குமான அறிகுறிகள் என்பதால், மக்கள் அச்சம் அடைய வேண்டாம். ஆனால் எச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.

அறிகுறி இருக்கும் அனைவருமே கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com