திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க ராகுல் வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்: இந்தியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்

News image

இஸ்ரேலில் பதற்றமான சூழல் - AP Photo

Updated On :1 மார்ச் 2026, 11:39 am IST

மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இஸ்ரேலிலும் ஈரானிலும் அதன் அண்டை நாடுகளிலும் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், அப்பகுதிகளிலுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையேயான தாக்குதல்கள் அதிகரிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே நமது தலையாயக் கடமையாகும். அதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

safety and security of every Indian citizen across the Middle East must be our highest priority. I urge the Government of India to take immediate and proactive measures to safeguard our people - Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.