

ஈரானில் உள்ள சுமார் 9,000 இந்தியர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜன. 16) தெரிவித்துள்ளது.
ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பதற்றமான சூழலைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது.
இது குறித்து வெள்ளிக்கிழமை (ஜன. 16) செய்தியாளர்களுடன் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால், “சுமார் 9,000 இந்தியர் குடிமக்கள் இப்போது ஈரானில் வசிக்கின்றனர். அவர்களுள் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஈரானிலுள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்தியர்களின் பாதுகாப்புக்கான தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.