லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவானது

லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவானது

லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில் இன்று (டிச.26) அதிகாலை 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியிலும் இன்று அதிகாலையில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com