நடப்பு 2023-2024-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் தற்போதுவரை 8 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து வருமான வரித் துறை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வரும் மாா்ச் வரையிலான நடப்பு 2023-2024-ஆம் மதிப்பீட்டு ஆண்டில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 8 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டிருந்தது.
கடந்த 2022-23-ஆம் மதிப்பீட்டு ஆண்டில், மொத்தம் 7 கோடியே 51 லட்சத்து 60 ஆயிரம் வருமான வரி கணக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. நிகழாண்டின் எண்ணிக்கை தற்போதே 8 கோடியைக் கடந்துள்ளது.
நடப்பு ஆண்டில் மேலும் 4 மாதங்கள் நிலுவையில் உள்ள சூழலில், இன்னும் கூடுதல் எண்ணிக்கையிலான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.