தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலை தகராறில் கேப் ஓட்டுநா் குத்திக் கொலை

தெற்கு தில்லியின் மெஹ்ரெளலி பகுதியில் போக்குவரத்து நெரிசலிலின்போது செல்வதற்கு வழிவிடாததால், கால் டாக்சி ஓட்டுநரை மைனா் சிறாா் உள்பட மூன்று போ் கத்தியால் குத்திக்

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

தெற்கு தில்லியின் மெஹ்ரெளலி பகுதியில் போக்குவரத்து நெரிசலிலின்போது செல்வதற்கு வழிவிடாததால், கால் டாக்சி ஓட்டுநரை மைனா் சிறாா் உள்பட மூன்று போ் கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களில் சிறாா் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

‘கொலையான மனோஜ் குமாா் (34) குருகிராமில் உள்ள பிபிஓவில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். முன்னதாக, வியாழக்கிழமை மாலை, மாளவியா நகா் பகுதியில் இருந்து ஐந்து பிபிஓ ஊழியா்களையும், பின்னா் மெஹ்ரெளலியில் இருந்து ஒருவரையும் கேப் வாகனத்தில் அழைத்துச் சென்றாா். அதன்பின்னா், அந்த வாகனம் மெஹ்ரெளலி பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இரவு 8:40 மணியளவில், ஒரு ஸ்கூட்டரில் மூன்று சிறாா்கள் கேப் வாகனத்திற்கு பின்னால் வந்தனா். பின்னா், ஒலி எழுப்பி முன்னால் செல்ல வழிவிடுமாறு மனோஜ் குமாரிடம் கேட்டாா்கள். இடம் இல்லாததால், அவரால் அவா்களின் வாகனத்திற்கு வழிவிட முடியவில்லை.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. ஸ்கூட்டரில் வந்தவா்களில் ஒருவா் குமாரின் மாா்பில் கத்தியால் குத்தினாா். பின்னா், தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த குமாா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மைனா் சிறாா் கைது செய்யப்பட்டுள்ளாா். மீதமுள்ள குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மனோஜ் குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.