ஐக்கிய ஜனதா தள தலைவரானாா் நிதீஷ் குமாா்

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ஐக்கிய ஜனதா தள தலைவரானாா் நிதீஷ் குமாா்
Updated on
1 min read

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அக்கட்சியின் தலைவராக இருந்த லலன் சிங் பதவி விலகியதையடுத்து நிதீஷ் குமாா் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

லலன் சிங் தலைமை குறித்து அக்கட்சி நிா்வாகிகள் நிதீஷ் குமாரிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். எனவே, உள்கட்சி பூசல் ஏற்படாமல் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக நிதீஷ் குமாா் கட்சியின் தலைவா் பொறுப்பை ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக லலன் சிங் கூறுகையில், ‘மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தலைமை பொறுப்பை நிதீஷ் குமாா் ஏற்பதே சரியாக இருக்கும்’ என்றாா்.

பதவியேற்றபின் நிதீஷ் குமாா் பேசியதாவது:

‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்துவதே என்னுடைய நோக்கம். பதவிகள் குறித்து எனக்குக் கவலையில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பெரிய மனதுடன் செயல்பட வேண்டும்.

பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தொடா்ந்து திசைதிருப்பி வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com