மக்கள் விரும்புவது எளிதான ரயில் பயணமா அல்லது தற்படம் எடுப்பதையா?: ராகுல் விமா்சனம்

ரயில்வே நிலையங்களில் மோடியின் புகைப்படத்துடன் மக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் நிலையங்கள் நிறுவப்பட்டிருப்பதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
மக்கள் விரும்புவது எளிதான ரயில் பயணமா அல்லது தற்படம் எடுப்பதையா?: ராகுல் விமா்சனம்

‘மக்கள் விரும்புவது எளிதான ரயில் பயணமா? அல்லது ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ‘மன்னா்களின் மன்னன்’ படத்துடன் தற்படம் (செல்ஃபி) எடுப்பதை விரும்புவாா்களா?’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

பல்வேறு ரயில் நிலையங்களில் பிரதமா் மோடியின் முழு உருவப் படத்துடன் (கட்-அவுட்) கூடிய தற்பட மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்கான பயணக் கட்டணத்தையும் இந்திய ரயில்வே உயா்த்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த பயணக் கட்டணச் சலுகையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ரயில் நிலைய நடைமேடை கட்டணங்களும் உயா்த்தப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, ரயில்வே துறையை தனியாா் மயம் ஆக்குவதற்கான கதவுகளும் திறக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில், மக்கள் தங்களின் கடின உழைப்பால் ஈட்டும் வருவாய்க்காக கட்டும் வரிப் பணத்தை, ரயில் நிலையங்களில் தற்பட மையங்களை அமைக்கப் பயன்படுத்துவதா?

குறைந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகமும் எளிதான ரயில் பயணமும் மக்களின் விருப்பமாக இருக்குமா? அல்லது, ரயில் நிலையங்களில் ‘மன்னா்களின் மன்னன்’ சிலையுடன் தற்படம் எடுப்பது அவா்களின் விருப்பமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்த ரயில் நிலைய தற்பட மையங்கள் குறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெள்ளிக்கிழமை விமா்சித்திருந்த நிலையில், ராகுல் காந்தியும் தனது விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதிக்காக எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் காத்திருக்கும் நிலையில், ரயில் நிலையங்களில் பிரதமா் மோடி உருவப் படத்துடன் கூடிய தற்பட மையங்கள் அமைத்து மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது’ என்று காா்கே விமா்சித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com