ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் இன்னும் வரவில்லை: உத்தவ் தாக்கரே

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு செய்வதற்கான அழைப்பு இன்னும் வரவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் இன்னும் வரவில்லை: உத்தவ் தாக்கரே

மும்பை: அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு செய்வதற்கான அழைப்பு இன்னும் வரவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.

ராம் லல்லா அனைவருக்கும் சொந்தமானவர், என்பதால் தனக்கு முறையான அழைப்பு தேவையில்லை என்றும், நான் விரும்பும் போது கோயிலுக்கு செல்வேன் என்று தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை இந்த மாபெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாக்கரே, ராமஜென்மபூமி இயக்கத்திற்காக சிவசேனா நீண்ட போராட்டத்தை மேற்கொண்டுள்ளது. இடைத் தேர்தலின் போது ராமர் கோயில் மற்றும் இந்துத்துவாவுக்காக பிரச்சாரம் செய்ததற்காக தனது தந்தையும் சிவசேனா நிறுவனருமான பால் தாக்கரேவின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோதே அயோத்திக்கு சென்றதை உத்தவ் தாக்கரே நினைவு கூர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் ராமர் கோயில் கட்ட வழிவகுத்தது, மத்திய அரசுக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்றார்.

குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 6,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com