கோப்புப்படம்
கோப்புப்படம்

தலித் பெண்ணை எண்ணெய்க் கொப்பரையில் தூக்கி வீசிய கும்பல்

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஒத்துழைக்காத தலித் பெண்ணை வெல்லம் தயாரிக்கும் கொப்பரையில் தூக்கியெறிந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பல் அப்பெண்ணை வெல்லம் தயாரிக்கும் கொப்பரையில் தூக்கியெறிந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் புதௌன் மாவட்டத்தில்  தலித் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அப்பெண் எதிர்த்துப் போராடியதைத் தொடர்ந்து அப்பெண்ணை அருகிலிருந்த கொதிக்கும் கொப்பரையில் தூக்கி வீசியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அப்பெண், தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பினௌலி காவல் ஆய்வாளர் சிங் கூறுகையில், “முசாபர்நகரைச் சேர்ந்த பெண் அப்பகுதியில் உள்ள பிரமோத் என்பவரின் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்துள்ளார். 

புதன்கிழமை பிரமோத், ராஜு மற்றும் சந்தீப் ஆகியோர் அப்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியுள்ளனர். அவர்களை எதிர்த்து போராடிய பெண்ணை கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கிருந்த சூடான எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் ஜாதிரீதியாக அவரை திட்டியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அம்மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதையடுத்து அப்பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரமோத், ராஜு மற்றும் சந்தீப் ஆகியோருக்கு எதிராக 307, 354, 504 உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com