பட்ஜெட் 2023: நிர்மலா சீதாராமனின் குறைந்த நேர உரை இதுதான்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் உரைகளில் மிகவும் குறைந்த நேரத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் இது என கணக்கிடப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் உரைகளில் மிகவும் குறைந்த நேரத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய பட்ஜெட் இது என கணக்கிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதில் இம்முறை தாக்கல் செய்த பட்ஜெட்டுக்காக 87 நிமிடங்கள் உரையாற்றினார். 

இதற்கு முன்பு கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்காக 92 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார் நிர்மலா சீதாராமன். அதில், 50 நிமிடங்களுக்கு அவர் உரையாற்றினார்.

இதுதான் இதுவரை அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே குறைந்த நேரத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் என்று இருந்தது. ஆனால் தற்போது பட்ஜெட் 2023 தாக்கல் செய்ததன் நேரம் அதை விடக் குறைந்துள்ளது. 

2020ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை மிகப்பெரியது. அது 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்திய பட்ஜெட் வரலாற்றில் இது மிக அதிக நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com