வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அதானி குழுமம் பங்கு மதிப்பு சரிவு எதிரொலி : ஆசியாவின் முதல் பணக்காரா் ஆனாா் முகேஷ் அம்பானி

ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரா் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தாா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2023, 8:48 pm

DIN

ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரா் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கெளதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 கோடி டாலா்களை (சுமாா் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலா்களுடன் (சுமாா் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-ஆவது இடத்தில் உள்ளாா்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலா்கள் (சுமாா் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 9-ஆவது இடத்தில் உள்ளாா்.

இந்நிலையில், ஆசியாவின் பணக்காரா்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கெளதம் அதானி, அந்த இடத்தை இழந்தாா். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.