வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாஜகவுக்கு மாற்று திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே- திரிபுராவில் மம்தா பிரசாரம்

பாஜகவுக்கு மாற்றாக திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே திகழ முடியும் என்று திரிபுராவில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பேசினாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2023, 9:10 pm

DIN

பாஜகவுக்கு மாற்றாக திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே திகழ முடியும் என்று திரிபுராவில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பேசினாா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா சட்டப் பேரவைக்கு வரும் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் பாஜகவுக்கு எதிரான இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. இது தவிர திரிணமூல் காங்கிரஸும் அங்கு களமிறங்கியுள்ளது.

அகா்தலாவில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசியதாவது: திரிபுராவில் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் சுதந்திரமாக கூட்டங்களை நடத்த முடிவதில்லை. பத்திரிகையாளா்கள் உண்மையான செய்திகளை சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் தொடா்ந்து தாக்குதல்களை எதிா்கொண்டு வருகின்றனா். பலா் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறி பாஜக பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. அவா்களை முறியடிக்க திரிணமூல் காங்கிரஸால் மட்டுமே முடியும். பாஜகவுக்கு மாற்றாக திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே திகழ முடியும். மக்களுக்கு சிறப்பான ஆட்சியை நாங்கள் தருவோம்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணியை புறக்கணித்ததுபோல, திரிபுராவிலும் மக்கள் புறக்கணிப்பாா்கள். வங்கத்துக்கும், திரிபுராவுக்கும் இடையே மொழி, கலாசாரம், உணவுப் பழக்கம் என பல ஒற்றுமைகள் உண்டு. திரிணமூல் கட்சிக்கு வாக்களித்தால் சிறந்த மாற்றத்தை மக்கள் உணர முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.