எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு விரைவில் வழங்குவோம்: ரஷிய தூதர் அலிபோவ் 

இரு தரப்பும் ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளதால், இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்புகளின் மூன்றாவது தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு விரைவில் வழங்குவோம்: ரஷிய தூதர் அலிபோவ் 



புதுதில்லி: இரு தரப்பும் ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளதால், இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்புகளின் மூன்றாவது தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

"இரு தரப்பினரும் முழு ஒப்பந்தத்தையும் முடிக்க உறுதிபூண்டுள்ளோம், நாங்கள் நிச்சயமாக அதைச் செய்வோம். அதை யாரும் தடுக்க முடியாது," என்று அலிபோவ் கூறினார்.

ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் 5 தொகுப்புகளை சுமாா் ரூ.35,000 கோடிக்கு வாங்குவதற்கு இந்தியா கடந்த 2018 அக்டோபரில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த அமைப்பு விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனிடையே, ரஷியாவிடமிருந்து ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான சட்டத்தை முந்தைய அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு இயற்றியது.

அச்சட்டத்தின் கீழ் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க வாய்ப்புள்ளது. எனினும், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. தேசப் பாதுகாப்பையும், தேச நலனையும் கருத்தில் கொண்டே ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதாக இந்தியத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. தேசப் பாதுகாப்பையும், தேச நலனையும் கருத்தில் கொண்டே ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதாக இந்தியத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் ரஷியா ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்புகளின் முதல் தொகுப்பை இந்தியாவுக்கு வழங்கியது. அதன் பின்னர் 2-ஆவது தொகுப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கியது.

இந்த நிலையில் ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்புகளின் 3-ஆவது தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். 

இந்தியா-ரஷியா உறவுகள் குறித்த மாநாட்டில் ஏவுகணை அமைப்பு வினியோகம் குறித்த கேள்விக்கு இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவும், ரஷியாவும் ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளதால், இந்தியாவுக்கு எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் அடுத்த தொகுப்பு விரைவில் வழங்கப்படும்.

இரு தரப்பினரும் முழு ஒப்பந்தத்தையும் முடிக்க உறுதிபூண்டுள்ளோம். யாரும் அதை தடுக்க முடியாது. ஏற்கனவே எஸ்-400 ஏவுகணை அமைப்பின் 2 தொகுப்புகள் இந்தியாவுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டன. மீதம் உள்ளவை விரைவில் வினியோகம் செய்யப்படும். 

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியாவுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, இந்தியா தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டால், ராஜதந்திர ரீதியாக அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ரஷியா தயாராக உள்ளது” எனவும்,  ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியை தீர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது என அலிபோவ் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com