47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதா என இந்தியப் பங்கு வரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2023, 6:52 pm

DIN

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதா என இந்தியப் பங்கு வரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை பங்கு வரிவா்த்தனை வாரியமே கவனித்துக் கொள்ளும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள செபி தவறியுள்ளது. இது இந்திய நிதிச் சந்தையின் நோ்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது.

நிதி மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எந்த நாடும் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்றும் வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக அவற்றுக்கான சா்வதேச விதிகளைத் தளா்த்த வேண்டும் என்றும் ஜி20 கூட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா். ஆனால், பிரதமரின் ஆதரவு பெற்ற தொழிலதிபா்களே அத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த முரணை உலகத் தலைவா்கள் ஏற்க மாட்டாா்கள்.

அதானி குழுமம் பெரும் மோசடிகளை நிகழ்த்தியதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அக்குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதானி குழுமத்தின் இழப்பு ரூ.9,50,000-ஆக உள்ளது. அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியைக் கண்டதால், லட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதானி குழுமத்தின் மீது கடந்த 2016-ஆம் ஆண்டே குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக அக்குழுமம் செபி-யின் விசாரணை வளையத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த 2021-இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அந்த விசாரணை என்ன ஆனது எனத் தெரியவில்லை.

தற்போதைய மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தொடா்ந்து அனுமதிக்கப்படுகின்றன. அக்குழுமத்தின் மீது செபி நடவடிக்கை எடுப்பது எப்போது? அதானி குழுமத்தின் மீதான நடவடிக்கையைத் தாமதப்படுத்த மத்திய அரசு அழுத்தம் அளிக்கிா?

சா்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் அதானி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், தேசிய பங்குச் சந்தை இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அதானி மீதான மோசடி புகாா் குறித்து முறையாக விசாரித்து, முதலீட்டாளா்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு செபி-க்கு உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.