மலையாளத் திரையுலகின் முதல் நாயகி! கூகுள் கெளரவிப்பு!!

மலையாளத் திரைப்படங்களில் முதல்முறை முழு கதாநயகியாக நடித்த பி.கே.ரோஸியின் 120வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 
பி.கே.ரோஸி
பி.கே.ரோஸி

மலையாளத் திரைப்படங்களில் முதல்முறை முழு கதாநயகியாக நடித்த பி.கே.ரோஸியின் 120வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903ஆம் ஆண்டு பிறந்தவர் பி.கே. ரோஸி. ஜே.சி. டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த மலையாளத்தின் முதல் கதாநாயகி பி.கே. ரோஸி.

இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஏனெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பி.கே. ரோஸி. அக்காலத்தில் சாதிய ரீதியாக கடும் அடக்குமுறை இருந்ததால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண், நாயர் குடும்பப் பெண்ணாக நடிப்பதா? என கேரளத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. 

எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல், இருந்த ரோஸி அதன் பிறகு நடிப்பதையே கைவிட்டிருந்தார். அவர் கேசவ பிள்ளை என்ற லாரி ஓட்டுநரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தார். 

அவரின் நினைவாக, பி.கே. ரோஸி ஃபிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு மட்டுமே உரிய இடமாக இருந்த சினிமாத் துறையில் பெண்கள் இடம்பெறுவதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது. பெண்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு, பெண் படைப்பாளிகளையும், பெண் திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறது.

இன்று பி.கே. ரோஸியின் பிறந்தநாள். அதனால், அவரை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. ''உங்களுடைய தைரியத்துக்கும், விட்டுச்சென்ற மரபுக்கும் நன்றி பி.கே. ரோஸி'' என கூகுள் குறிப்பிட்டுள்ளது. 
 
இந்த கவன ஈர்ப்புச் சித்திரத்தை மும்பையைச் சேர்ந்த சோயா ரியாஸ் வடிவமைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com