யுகேஜி குழந்தையை ஃபெயிலாக்கி விமரிசனத்துக்குள்ளான பள்ளி

ஆறு வயதே ஆன யுகேஜி குழந்தை இந்த ஆண்டு ஃபெயிலானதாக, பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
யுகேஜி குழந்தையை ஃபெயிலாக்கி விமரிசனத்துக்குள்ளான பள்ளி
யுகேஜி குழந்தையை ஃபெயிலாக்கி விமரிசனத்துக்குள்ளான பள்ளி

பெங்களூரு:  ஆறு வயதே ஆன யுகேஜி குழந்தை இந்த ஆண்டு ஃபெயிலானதாக, பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அனேகலில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்று, தனது பள்ளியல் யுகேஜி பயிலும் குழந்தையை ஃபெயில் என்று அறிவித்து, அடுத்த கல்வியாண்டிலும் யுகேஜி படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இது குறித்து அந்த குழந்தையின் தந்தை பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமையிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. ஒரு குழந்தைக்காக தங்களது நடைமுறையை மாற்ற முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டதாக தந்தை மனோஜ் பாதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரோ, குழந்தையை ஃபெயிலாக்குவதன் மூலம், அது வருங்காலத்தில் கல்வியில் உரிய முறையில் ஆர்வம் செலுத்தி படிக்க வழி பிறக்கும் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தனது குழந்தை இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் என்றும், அதனால் இந்த சிக்கலைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றும் தந்தை கவலை தெரிவிக்கிறார்.

இது குறித்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி, முன்னாள் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். யுகேஜி மாணவி, 160 மதிப்பெண்ணுக்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருப்பதால் அவர் ஃபெயில் என்று எழுதிக் கொடுத்த தாளையும் டிவிட்டரில் இணைத்துள்ளார்.

தகவல் பரவிய நிலையில், கல்வித்துறை சார்பில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com