
தில்லி கலால் கொள்கை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மகுண்டா ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் கடந்த மூன்று நாள்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்ட மூன்றாவது கைது இதுவாகும்.
மகுண்டா ரோஸ் அவென்யூ நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரை இரண்டு வாரக் காவலில் வைக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது நபர் இவராவர்.
முன்னதாக, பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் மல்ஹோத்ரா மற்றும் ஆம் ஆத்மியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயரின் உதவியாளர் ராஜேஷ் ஜோஷி ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகுண்டா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.