ஜம்மு-காஷ்மீரில் பாஜக தீவிரவாதத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது: அமித் ஷா

 பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் பெரிய அளவில் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக தீவிரவாதத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது: அமித் ஷா

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் பெரிய அளவில் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பகுதியில் ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடெமியில் 74-வது பிரிவில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் பயிற்சி பெற்று வருபவர்களிடையே பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: மத்திய அமைப்புகள், அனைத்து மாநில காவல் துறை அதிகாரிகளின் முயற்சியால் ஒரே நாளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெற்றிகரமாக தடை விதிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய புது விதமான அணுகுமுறை தேவைப்படுகிறது. நாட்டின் பொருளாதார மையங்களை பாதுகாப்பது, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகளை பாதுகாப்பது, ஆதாரத்தினை மையமாக வைத்து விசாரணை மேற்கொள்வது, போதப்பொருள்கள் கடத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையேயான இணைப்பை உடைப்பது மற்றும் இணையவழியில் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களை தடுப்பது போன்றன விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத நிகழ்வுகளாலும், வடகிழக்குப் பகுதி தீவிரவாத ஊடுருவலாலும், இடதுசாரி தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்டு காணப்பட்டது.  ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு பெருமளவில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன. வடகிழக்குப் பகுதிகளில் ஊடுருவலில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கைகளால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இடது சாரி தீவிரவாதத்தால் வடகிழக்கின் 96 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது. வருகிற 2047 ஆம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும்போது இந்தியாவை மேலும் வலிமையான நாடாக மாற்ற நீங்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிறப்பான பொறுப்பு உள்ளது. அவர்கள் நாட்டின் சட்ட ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுபவர்கள். சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாவிட்டால் எந்த ஒரு நாட்டிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com