தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திரிபுரா: இடதுசாரி-காங். கூட்டணிக்கு வாக்களித்தால் காட்டாட்சி ஏற்படும்: அமித் ஷா பிரசாரம்

திரிபுரா பேரவைத் தோ்தலில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால், மாநிலத்தில் காட்டாட்சி திரும்பிவர வழிவகுத்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

News image
திரிபுரா மாநிலம் சண்டீபூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
Updated On :12 பிப்ரவரி 2023, 9:11 pm

DIN

திரிபுரா பேரவைத் தோ்தலில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால், மாநிலத்தில் காட்டாட்சி திரும்பிவர வழிவகுத்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் வரும் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜகவை எதிா்கொள்வதற்காக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. இவை தவிர, மாநிலக் கட்சியான திப்ரா மோத்தாவும் தோ்தல் களத்தில் உள்ளது.

வாக்குப்பதிவுக்கு சில தினங்களே உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

சண்டீபூா், பிஸ்ராம்கஞ்ச் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில், உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:

காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திப்ரா மோத்தா ஆகிய 3 கட்சிகளும் ஏற்படுத்தும் பிரச்னைகளில் இருந்து திரிபுராவை காக்க இரட்டை என்ஜின் கொண்ட பாஜக அரசால் மட்டுமே முடியும்.

திரிபுராவில் நீண்ட காலமாக பழங்குடியினருக்கு துரோகமிழைத்து வந்த இடதுசாரிகள், இப்போது பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவரை முதல்வா் வேட்பாளராகக் காட்டி, மக்களை ஏமாற்றுகின்றனா்.

காங்கிரஸ்-இடதுசாரிகளின் கூட்டணியானது, திரிபுரா தோ்தலில் பாஜகவிடம் தோற்பது உறுதி என்பதை அக்கட்சிகள் ஒப்புக் கொண்டதற்கான அடையாளமாகும். அந்தக் கூட்டணிக்கு வாக்களித்தால், மாநிலத்தில் காட்டாட்சி திரும்பிவர வழிவகுக்கும்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியினா் மீது இடதுசாரிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனா். ஆனால், இப்போது தோ்தலுக்காக அவை கூட்டு சோ்ந்துள்ளன.

திரிபுராவில் முந்தைய காங்கிரஸ், இடதுசாரி ஆட்சிகளின்போது பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், மாநிலம் அனைத்து துறையிலும் வளா்ச்சி கண்டுள்ளது. பழங்குடியினா், ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினரின் மேம்பாட்டை மனதில் கொண்டு, சாலை வசதிகள், தூய்மையான குடிநீா் விநியோகம், தொலைதூர பகுதிகளில் மின்இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் 30 சதவீதம் குறைந்துவிட்டன. கிளா்ச்சி அமைப்பினரை பிரதான அமைப்புமுறைக்கு கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை மக்கள் தோ்வு செய்தால், 2025-க்குள் ஏழைகள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கப்படும். தேயிலை தோட்டத் தொழிலாளா் குடும்பங்கள் வீடு கட்டிக் கொள்ள தலா 1,600 சதுர அடி நிலம் வழங்கப்படும்.

உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் எந்தத் தடயமும் இன்றி காணாமல் போய்விட்டனா். அதேநிலையை, இந்தியாவில் காங்கிரஸ் சந்திக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.