
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் ஸ்டெப்பை நடிகர் ராம் சரண் கற்றுக்கொடுத்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம் சரண் உள்ளிட்ட பிரலங்கள் கலந்து கொண்டனர். அப்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் ஸ்டெப்பை நடிகர் ராம் சரண் கற்றுக்கொடுத்தார்.
இதையும் படிக்க- அதானி விவகாரம்: பாஜக தலைமையகம் நோக்கி ஆம் ஆத்மி பேரணி!
இந்த விடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 95-ஆவது ஆஸ்கா் விழா மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 23 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. அதில் ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 4 பாடல்களுடன் அப்பாடல் போட்டியிடவுள்ளது.
சிறந்த பாடலுக்கு ஆஸ்கா் விருது வழங்கப்படவுள்ளது. ‘நாட்டு நாட்டு’ பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான இந்தப் படத்தை ராம் சரண் மற்றும் ஜூனியா் என்டிஆா் நடிப்பில் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.