தில்லி பால் பண்ணை ஊழியரிடம் ரூ.17 லட்சம் கொள்ளை: 6 பேர் கைது

தில்லி மதர் டெய்ரி வினியோகஸ்தரிடம் ரூ.17 லட்சத்தைக் கொள்ளையடித்ததாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
தில்லி பால் பண்ணை ஊழியரிடம் ரூ.17 லட்சம் கொள்ளை: 6 பேர் கைது

புது தில்லி: தில்லி மதர் டெய்ரி வினியோகஸ்தரிடம் ரூ.17 லட்சத்தைக் கொள்ளையடித்ததாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட ரூ.1.4 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.8.25 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

டிஎம்எஸ் மற்றும் மதர் டெய்ரியில் வினியோகஸ்தராக இருக்கும் ஆஷிஷ் குமார், தோள் பையில் ரூ. 17 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் தில்லி கிரிஷன் விஹாரில் உள்ள மீரட் பால் பண்ணைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:  

ஆஷிஷ் பால் விற்பனையில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் அவரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்." 

இதுதொடர்பாக சுல்தான்புரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 392, 394 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொள்ளையர்களில் ஒருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் பால் வினியோகஸ்தரிடம் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது, கொள்ளையர்கள் பிரிஜேஷ் ஜா, பங்கஜ் குமார், ராமன், பியூஷ், ஹிதேஷ் மற்றும் ரோஹித் என அடையாளம் காட்டினார். 

மேலும், "கொள்ளையர்கள் தங்களின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காகவும், மும்பை திரைப்பட நகரத்திற்குச் செல்வதற்காகவும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது" விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறை அதிகாரி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com