மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: விசாரணைக்காக 2 பேர் பெங்களூரு சென்றனர்!

திருப்பூர் மாநகரில் இருவேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணைக்காக இரண்டு பேரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கோப்புப்படம்

Published On :


திருப்பூர் மாநகரில் இருவேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணைக்காக இரண்டு பேரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கர்நாடகம் மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை திருப்பூர் மாநகருக்குள்பட்ட ராம் காலனி மற்றும் நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட திருநகர் உள்ளிட்ட இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.

ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் இருவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை முடிவில் ராம் காலனியில் உள்ள முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் சிறுநகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகிய இருவரை விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். 

கர்நாடகம் மாநிலம் மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக இரண்டு பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.