நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத்தின் மும்பை - காந்தி நகா் வழித்தடத்தில் கடந்த ஜனவரி மாதம் வரையில் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனா்.
பிலாஸ்பூா் - நாக்பூா் வழித்தடத்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்துள்ளனா்.
இந்தத் தகவல் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் 2019-இல் முதலில் தொடங்கப்பட்டது.
எட்டு ரயில்கள் நிகழாண்டு வரையில் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளன. இந்த ரயில்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 10-ஐ எட்டியுள்ளது.
கடந்த நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட சென்னை -மைசூா் வழித்தடத்தில் 42 முறை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனா். வந்தே பாரத் ரயில்களுக்கு முன்பதிவு செய்தவா்கள் மற்றும் காத்திருப்போா் எண்ணிக்கை அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.