திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று(பிப். 16) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
திரிபுரா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தையொட்டிய சா்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
மத்தியப் படைகளைச் சோ்ந்த 25,000 பேரும் மாநில காவல் துறை மற்றும் ஆயுதப் படைப் பிரிவைச் சோ்ந்த 31,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 31,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாா்ச் 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணிக்கு 32.06% வாக்குகளும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35% வாக்குகளும் பதிவான நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க | 'காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் விரைவாக பள்ளிக்கு வருகின்றனர்'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லி காவல் துறையில் அதிரடி உயா்நிலை மாற்றம்!
மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: மூவா் கைது

ஹோலிப் பண்டிகை: இன்று தில்லியில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும்; அதிகாரிகள் தகவல்

தில்லியில் இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 4 போ் கைது
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

