திரிபுரா பேரவைத் தேர்தலில் 77% வாக்குப்பதிவு!

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 91.4 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.
திரிபுரா வாக்குப்பதிவு
திரிபுரா வாக்குப்பதிவு

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77 வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 91.4 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று(பிப். 16) ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல்  1 மணி நிலவரப்படி 51.35% வாக்குகளும் பிற்பகல் 3 மணி வரை  69.96 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன. மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டு  5  மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 76.9 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திரிபுரா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இன்று பதிவான வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com