பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளததையடுத்து அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் ஏற்கனவே விலை உச்சத்தை எட்டிவிட்ட நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் திண்டாடி வரும் அந்நாட்டின் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயர்வு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

நீண்டகாலமாகத் தொடரும் அரசியல்வாதிகள், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட அரசியல் குழப்பம், இந்தியாவுடன் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் பெரும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.

உள்நாட்டு மக்களின் உணவுத் தேவையைக்கூட பூா்த்தி செய்ய முடியாமல் திண்டாடி வரும் அந்நாட்டில், அந்நியச் செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்துவிட்டது. சா்வதேச நிதியத்திடம் அதிக கடன் பெற்றுள்ள பாகிஸ்தான், மீண்டும் உதவி கேட்டு காத்திருக்கிறது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளை அந்நாட்டுக்கு சா்வதேச நிதியம் விதித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க உள்நாட்டில் உணவுக்காக மக்கள் வீதிகளில் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. பல மணி நேரம் தொடரும் மின்வெட்டு பிரச்னையால் தொழில் நிறுவனங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அவசியமான ஒன்றான பெட்ரோல் விலை மீண்டும் மீண்டும் உயர்ந்து வருவது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. 

புதிய விலை ஏற்றத்தையடுத்து, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ,272-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்ந்து ரூ.196.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று பொது விற்பனை வரி 17 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com