அதானி விவகாரம்: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துதல் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துதல் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பங்குகளை மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க நிறுவனம் குற்றச்சாட்டு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் அப்பாவி முதலீட்டாளா்களைக் காக்கக் கோரியும், அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சரிய வைக்க மேற்கொள்ளப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஏற்கெனவே இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பங்கு வா்த்தக நடைமுறை நெறிமுறைகளை வலுப்படுத்த நிபுணா் குழு அமைக்கப்படும் என மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 17) விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, மத்திய அரசு மற்றும் செபி சார்பில் நிபுணர்கள் குழு பரிந்துரை சீல் வைக்கப்பட கவரில் வைத்து கொடுக்கப்பட்டது. இருப்பினும், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் எந்த தரப்பிடம் இருந்தும் நிபுணர் குழு தொடர்பான பரிந்துரையைப் பெறப் போவதில்லை எனத் தெரிவித்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியதாவது: நாங்கள் சீல் வைக்கப்பட்டு வழங்கப்படும் இந்த பரிந்துரையை ஏற்க முடியாது. முதலீட்டாளர்கள் பலரின் நலன் அடங்கியுள்ளதால் இந்த விவகாரத்தினை விசாரிக்கும் குழுவினை அமைப்பதில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் முக்கியம். இந்த விவகாரத்தில் அரசிடம் இருந்தும் மற்ற மனுதாரர்கள் பரிந்துரைக்கும் நபர்களின் பெயர்களை ஏற்கப் போவதில்லை. உச்சநீதிமன்றமே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்கும் என்றனர். 

மேலும், அதானி குழுமம் தொடர்பான புகாரினை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com