பணம் வானத்திலிருந்து கொட்டாது: அரசு ஊழியர்களுக்கு மம்தா பதில்!

அகவிலைப்படி உயர்வு தொடர்பாக எழுந்து வரும் அரசு அதிகாரிகளின் கோரிக்கைக்கு பதிலளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல என தெரிவித்துள்ளார்.
பணம் வானத்திலிருந்து கொட்டாது: அரசு ஊழியர்களுக்கு மம்தா பதில்!
Published on
Updated on
1 min read

அகவிலைப்படி உயர்வு தொடர்பாக எழுந்து வரும் அரசு அதிகாரிகளின் கோரிக்கைக்கு பதிலளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல என தெரிவித்துள்ளார்.

அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்த வரையில் தனது அரசு கடினமாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார். மேற்குவங்கத்தின் பங்குரா மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கான சேவைகளை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நான் ஒன்றும் மந்திரவாதி இல்லை. நான் கேட்டவுடன் பணம் வானத்திலிருந்து வந்துவிடாது. சத்யஜித் ரே படத்தில் வானத்திலிருந்து சாக்லேட் வருவது போல் பணமெல்லாம் வராது. மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்காதபோதும், நாங்கள் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வினை வழங்கியுள்ளோம். மாநிலத்தின் நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா நேற்று முன் தினம் (பிப்ரவரி 15) வெளியிட்ட பட்ஜெட்டில் அரசாங்கப் பணிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பிறருக்கும் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வினை அறிவித்தார்.

மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் கோரிக்கை வைத்தும் பயனில்லை. மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியினையும் அளிக்கவில்லை. மேற்கு வங்கத்தின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. மேற்கு வங்க அரசு ஏழை மக்களை வெளியேற்றுவதில்லை. மாறாக அவர்களுக்கு நில உரிமை கொடுத்துள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசை மத்திய அரசு தனிமைப்படுத்துகிறது. மத்திய அரசு ஏதோ அவர்களது பணத்தினை கொடுப்பது போல் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் செலுத்திய வரிப்பணத்திலிருந்து நமது பங்கினை அளிக்கின்றனர். மேற்குவங்க மாநில மக்களுக்கு அவர்களது உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் உரிமை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றால் மட்டுமே மேற்குவங்கம் முன்னேற்றமடையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com