பிரதமர் நரேந்திர மோடி தலையிலான அரசில் ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதம், வடகிழக்கு ஊடுருவல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலக அரங்கில் முதன்மையான நாடாக மாற்ற விரும்பும் பிரதமரின் எண்ணம் குறித்தும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் லோக்மத் ஊடகக் குழுவினால் அதனுடைய மராத்தி பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இந்தியா அதனுடைய 100-வது சுதந்திர தினத்தை இன்னும் 25 ஆண்டுகளில் கொண்டாட உள்ளது. இந்த நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாக மூன்று முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். முதலாவதாக இந்த கால தலைமுறையினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாவதாக கடந்த 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மூன்றாவதாக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவினை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு 80 சதவிதம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு திறம்பட கையாண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதம், வடகிழக்கு ஊடுருவல், இடதுசாரி தீவிரவாதம் போன்றன நாட்டில் 80 சதவிகிதத்துக்கு குறைந்துள்ளது. ஒரு ஆண்டில் 1.8 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளனர். இது மிகப்பெரிய விஷயம். கடந்த 70 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி காஷ்மீருக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெறும் மூன்றே ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடியினை காஷ்மீருக்காக செலவிட்டுள்ளது.
இதையும் படிக்க: அதானி குடும்பத்தின் மற்றொரு முறைகேடு! ஃபோர்ப்ஸ் குற்றச்சாட்டு!
காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்க் குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி போன்றன கொண்டு வரப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய அளவிலான மாற்றம். வடகிழக்குப் பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கின் 60 சதவிகிதப் பகுதிகளில் ஆயுதப் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம்.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது. 70 சதவிகித பாதுகாப்புத் துறைச் சார்ந்த பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்தியா உலக அளவில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தியின் கூடாரமாக மாறியுள்ளது. அரசு மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகளையே எடுத்து வருகிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும் நாடாக மாறும். அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் செயற்கைக் கோள் துறையிலும் இந்தியா முன்னணி நாடாகத் திகழும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்: திமுக தேர்தல் அறிக்கை!

மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்: திமுக அறிக்கையை விமர்சித்த இபிஎஸ்!
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026

காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி! விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

