பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை(பிப். 19) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :18 பிப்ரவரி 2023, 6:21 am

DIN

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை(பிப். 19) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இதுகுறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை(பிப். 19) தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகவும் விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் மணீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார்.

மேலும், 'அவர்கள் எனக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை என முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினர். என் வீட்டில் சோதனை நடத்தினர். வங்கி லாக்கரை சோதனை செய்தனர். ஆனால், எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. தில்லி குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் இவற்றை எல்லாம் நிறுத்த விரும்புகிறார்கள்' என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.